search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொள்ளாச்சி பாலியல் வழக்கு"

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கை முதலில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு அதன் பிறகு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளி நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்களின் பெயர் பட்டியலை பெற்றுச் சென்றனர் .

    இதுதவிர பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம், பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் சென்றனர். ஆனால் அங்கு எதற்கு சென்றார்கள் என்பது குறித்து தகவல் தெரியவில்லை.

    பொள்ளாச்சி எம்.ஜி.ஆர் நகரில் சபரிராஜன் வீடு உள்ளது. அங்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர். சபரிராஜன் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது அவர்கள் சில தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    மாக்கினாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசு வீட்டிற்கும் சென்று விசாரணை நடத்தலாம் என்ற தகவல் பரவியது. ஆனால் இரவு 10 மணி வரை சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கு செல்லவில்லை.

    இந்த நிலையில் மாக்கினாம் பட்டி மற்றும் அதே பகுதி ஜோதி நகரில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பலரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் முகவரிகளை பெற்று சென்றுள்ளனர்.

    இதனால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட மணிவண்ணன் போலீஸ் காவல் முடிந்து இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். #PollachiCase #CBCID
    கோவை:

    பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    பாலியல் புகார் அளித்த மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் பார் நாகராஜ், செந்தில், மற்றொரு வசந்த குமார், பாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் (25) கடந்த 25-ந் தேதி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.

    மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததில் மணிவண்ணனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக மணிவண்ணனை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அவரை 3 நாட்கள் விசாரிக்க நீதிபதி நாகராஜன் அனுமதி அளித்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மணிவண்ணனை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரிடம் மாணவிகள், இளம்பெண்கள் புகார் தொடர்பாக துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது மணிவண்ணன் பயன்படுத்திய செல்போன் கைப்பற்றப்படவில்லை. அந்த செல்போன் தொலைந்து விட்டதாக மணிவண்ணன் கூறி உள்ளார். அதில் மாணவிகள், இளம்பெண்கள் ஆபாச படம் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மணிவண்ணன் கொடுத்த தகவலின் பேரில் வாலிபர் ஒருவரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர். மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். அவர்களுக்கும் பாலியல் விவகாரத்திற்கும் தொடர்பு உள்ளதா? எனவும் மணிவண்ணனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் போலீசாருக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

    3 நாட்கள் விசாரணை இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து இன்று மாலை மணிவண்ணனை கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். #PollachiCase #CBCID

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மணிவண்ணன் நண்பர்கள் உள்பட மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். #PollachiCase #CBCID
    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், சதீஷ், வசந்த் குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    புகார் அளித்த மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் பார் நாகராஜ், செந்தில், மற்றொரு வசந்த குமார், பாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் (25) கடந்த 25-ந் தேதி கோவை கோர்ட்டில் சரணடைந்தார். அவரை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் கூடுதலாக மேலும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    இதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. குறிப்பாக, மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததில் மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை பாலியல் பலாத்கார வழக்கில் சேர்த்து கைது செய்தனர். இது தொடர்பான அறிக்கையை கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்

    பாலியல் வழக்கு தொடர்பாக மணிவண்ணனிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி 10 நாட்கள் அனுமதி கேட்டு கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவின் அடிப்படையில் மணிவண்ணனிடம் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி நாகராஜன் அனுமதி அளித்தார். இதையடுத்து நேற்று மணிவண்ணனை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலியல் வழக்கில் வேறு யார்-யாருக்கு தொடர்பு உள்ளது? திருநாவுக்கரசின் நெருங்கிய நண்பர்கள் யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தினர். மேலும், பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டதும் திருநாவுக்கரசு ஆந்திராவுக்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்தார். இதேபோல மணிவண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் அவரும் தலைமறைவானார்.

    இவர்கள் தலைமறைவான காலகட்டத்தில் சமூக வலை தளங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் வெளியாகி இருந்தது. எனவே வீடியோக்கள் வெளியான சம்பவத்தில் மணிவண்ணனுக்கு தொடர்பு உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.

    சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு மணிவண்ணன் அளித்த பதில்களை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். நாளை (வெள்ளிக்கிழமை) போலீஸ் காவல் முடிந்து மணிவண்ணன் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்.

    அதன்பிறகு இவ்வழக்கில் அவரது நண்பர்கள் உள்பட மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதில் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறியதாவது:-

    மணிவண்ணன் மீது அடிதடி வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் அவரது செல்போன் தொடர்பு, பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் தொடர்புகள் மூலம் விசாரணை நடத்தியதில் இவருக்கும் பாலியல் வழக்கில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியது. இதையடுத்து பாலியல் வழக்கிலும் மணிவண்ணனை கைது செய்துள்ளோம். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #PollachiCase #CBCID



    தமிழகத்தையே உலுக்கியிருக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கு, சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. #PollachiAbuseCase #PollachiAssaultCase #JusticeforWomen
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வலையில் விழவைத்து, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து வார்த்தைகளால் சொல்ல முடியாத கொடூரங்களை நிகழ்த்தியுள்ளனர்.

    இதுதொடர்பாக  சபரிராஜன் (வயது 25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டிஜிபி பிறப்பித்துள்ளார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீசாரிடம் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட உள்ளன.

    பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி வரும் இந்த நபர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். #PollachiAbuseCase #PollachiAssaultCase #JusticeforWomen
    ×